சேவை வர்த்தகத்துக்கான 2025 சீன சர்வதேச பொருட்காட்சியில் 80க்கும் மேலான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள், உலகில் முன்னணி தொழில் நிறுவனங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இப்பொருட்காட்சி, சீனாவுடன் சேர்ந்து வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் முக்கிய மேடையாக விளங்குகிறது என்று பல வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் உயர் நிலை தலைவர்கள் தெரிவித்தனர்.
பிலிப்ஸ் நிறுவனத்தின் சீனப் பரிவின் துணை இயக்குநரும் சந்தைப் பிரிவின் பொறுப்பாளருமான யாங்தோங் லான் கூறுகையில்,
இப்பொருட்காட்சி, உலகில் முன்னணியில் உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இதன் மூலம், முன்னணியில் உள்ள புதிய உற்பத்தி பொருட்களைக் கண்டறியலாம். இத்தகைய உற்பத்திப் பொருட்கள் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன. சீனச் சந்தையில் எமது நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. சீனாவுக்கான ஜார்ஜியா தூதரகத்தின் அதிகாரி லெவன் கூறுகையில்,
நாங்கள் தொடர்ந்து 7 ஆண்டுகளாக இப்பொருட்காட்சியில் கலந்துகொண்டோம். இதன் மூலம், சீனப் பொது மக்களுடன் இணைந்து தொடர்புகொள்ளலாம். கடந்த ஆண்டு முதல், மேலதிகமான சீன பயணிகள் எமது நாட்டில் பயணம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர் என்றார்.