மனிதரை ஏற்றிச்செல்லும் மெங்சோ எனும் விண்கலத்தின் பூஜ்ய-உயரத்தில் தப்பிக்கும் முறை ஜுன் 17ஆம் நாள் சீனாவின் ஜியூச்சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. சீனாவில் மனிதரை ஏற்றிச்செல்லும் சந்திர மண்டல ஆய்வு புதிய சாதனையை எட்டியுள்ளது என்பது இது காட்டுகிறது.
தப்பிக்கும் முறையானது என்பது, மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலப் பயணத்துக்கான முக்கிய பாதுகாப்பு உத்தரவாதம் முறையாகும்.
இதன் மூலம், அவசர சிக்கல் ஏற்பட்டால், விண்வெளிவீரர்களை ஏற்றிச்செல்லும் விண்கலத்தின் திரும்பு கலம் ஆபத்தான பிரதேசத்திலிருந்து வெளியேற்றும் அதேவேளையில், விண்வெளிவீரர்கள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.