பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் பவநகரில் சமுத்திர சே சம்ருத்தி என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இது இந்தியாவின் கடல்சார் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, தற்சார்பு நிலையை அடைவதற்கான ஒரு முக்கிய படியாகும்.
இந்த திட்டம் குஜராத்தில் தொடங்கப்பட்டாலும், இது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான ஒரு தேசிய தொலைநோக்கு பார்வை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்தியா, சிப்ஸ் முதல் கப்பல்கள் வரை அனைத்தையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும், வெளிநாட்டு சார்பைக் குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடல்சார் வர்த்தகத்தை எளிதாக்கும் நோக்கில், ஒரே தேசம், ஒரே ஆவணம் மற்றும் ஒரே தேசம், ஒரே துறைமுக செயல்முறை போன்ற சீர்திருத்தங்களை பிரதமர் அறிவித்தார்.
சமுத்திர சே சம்ருத்தி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
