ஐ.நாவின் உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 21ஆம் நாள் உலகின் முக்கியமான 6 வேளாண்மை மரபுச் செல்வ அமைப்பு முறைகளைப் புதிதாக அங்கீகரித்துள்ளது.
அவற்றுள் சீனாவின் சேஜியாங் மாநிலத்தின் தெஜிங் வட்டத்திலுள்ள நன்னீர் முத்து கலப்பு வளர்ப்பு அமைப்பு முறை, ஃபூஜியன் மாநிலத்தின் ஃபுதின் வெள்ளைத் தேயிலை பண்பாட்டு அமைப்பு முறை, கான்சு மாநிலத்தின் கௌலான் வட்டத்திலுள்ள ஷீச்சுவான் பழைய பேரிக்காய் தோட்ட அமைப்பு முறை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதனையடுத்து, உலகின் முக்கிய வேளாண்மை மரபுச் செல்வ அமைப்பு முறைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சீனாவின் அமைப்பு முறைகளின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது.
