குவாங்சோ நகரில் நடைபெற்ற 138ஆவது சீன ஏற்றுமதிப் மற்றும் இறக்குமதி பொருட்காட்சி நவம்பர் 4ஆம் நாள் நிறைவடைந்தது. இதில் 223 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து 3 இலட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேலான வாங்குவர்கள் கலந்துகொண்டனர். கடந்த முறையில் இருந்ததை விட 7.5 விழுக்காடு அதிகரித்து, வரலாற்றில் மிக அதிகமான நிலைக்கு எட்டியுள்ளது. இதில் எட்டப்பட்டுள்ள ஏற்றுமதி தொகை 2565 கோடி அமெரிக்க டாலராகும்.
இப்பொருட்காட்சியில் மொத்தமாக 632 புதிய உற்பத்தி பொருட்கள் வெளியிடப்பட்டன. மொத்த 46 இலட்சம் காட்சி பொருட்களில் 20 சதவீதகம் புதிய உற்பத்திப் பொருட்கள், பசுமையான உற்பத்தி பொருட்கள் மற்றும் தற்சார்பு அறிவுசார் சொத்துரிமை கொண்ட பொருட்களாகும். எம்பொதிட் ரோபோ, முப்பரிமாண அச்சுப்பொருட்கள் உள்ளிட்டவை மிகவும் வரவேற்கப்பட்டன.
