சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவரும் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய கமிட்டியின் தலைவருமான ஷி ச்சின்பிங் ஜுலை முதல் நாள் முற்பகல் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய கமிட்டியின் 6ஆவது கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த தேசிய சந்தையின் கட்டுமானம், கடல் சார் பொருளாதாரத்தின் உயர்தர வளர்ச்சி ஆகியவற்றை ஆழமாக முன்னெடுப்பது பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில் ஷி ச்சின்பிங் கூறுகையில்,
ஒருங்கிணைந்த தேசிய சந்தையைக் கட்டியமைப்பது, புதிய வளர்ச்சிக் கட்டமைப்பை உருவாக்கி, உயர்தர வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான தேவையாகும் என்று சுட்டிக்காட்டினார். கட்சி மத்தியக் கமிட்டியின் பணி ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, இப்பணியைக் கூட்டாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், சீனப பாணி நவீனமயமாக்கத்தை விரைவுப்படுத்த கடல்சார் பொருளாதாரத்தின் உயர் தர வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும், சீனத் தனிச்சிறப்புடைய கடல் சார் முன்னணி நாட்டை நிறுவ வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.