ஆர்.எஸ்.எஸ். தென் தமிழக தலைவராக ஆ. ஆடலரசன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் ஆர்.எஸ்.எஸ். வட தமிழக தலைவராக ஸ்ரீ குமாரசாமி ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆர். எஸ். எஸ். என்று அழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தென் மற்றும் வட தமிழக தலைவர் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனநாயக முறைப்படி நடைபெறும்.
அந்த வகையில், தென் தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கான தேர்தல் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில் இராமநாதபுரத்தை சேர்ந்த ஆ.ஆடலரசன் (வயது 65) தென் தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இவர் இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். தென் தமிழக தலைவராக ஆ. ஆடலரசன் பணியாற்றி வருகிறார்.
இதேபோல் வட தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கான தேர்தல் புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் ஸ்ரீ குமாரசாமி ஜி வட தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.