அப்போது பி.எஸ் வீரப்பா ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். சில காலத்திற்குப் பிறகு பள்ளிகள் திறந்தன.
ஆனால், பி.எஸ்.வீரப்பா திரும்பவும் பள்ளிக்குத் திரும்பவே இல்லை. நாடகத்திற்குள் புகுந்தார். அதனால்தான் மக்கள் மனதைக் கவர்ந்த முதல் வில்லனாக பி.எஸ். வீரப்பா உருவெடுத்தார்.
பி.எஸ். வீரப்பாவின் சிரிப்பும் வசன உச்சரிப்பும் குரல் வளமும் வில்லன் கதாபாத்திரத்திற்குத் தனித்த அடையாளத்தை உருவாக்கியது.
“சபாஷ், சரியான போட்டி” என்று வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் அவர் பேசிய வசனமும் “மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி” என்று மகாதேவி படத்தில் பேசிய வசனமும் எக்காலத்திற்கும் ஒலித்துக் கொண்டிருப்பவை.
– 1950 செப்டம்பர் மாதத்தில் வெளிவந்த ‘பேசும் படம்’ இதழிலிருந்து…
பிளேக் நோயினால் நடிக்க வந்த பி.எஸ்.வீரப்பா!
