சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்புதிய தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 8 திங்களில், சீனாவின் நடுத்தர மற்றும்
சிறிய தொழில் நிறுவனங்கள், சீராக செயல்பட்டு வருகின்றன. அவற்றின் புத்தாக்க
உயிராற்றல் குறிப்பிட்டளவில் உயர்ந்துள்ளது. இக்காலக்கட்டத்தில், ஆண்டுக்கு 2 கோடி
யுவானுக்கு அதிகமான வருமானமுடைய நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின்
கூட்டு மதிப்பு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.6 விழுக்காடு
அதிகரித்தது. இந்த அதிகரிப்பு வேகம், பெரிய தொழில் நிறுவனங்களை விட 3.3 விழுக்காடு
அதிகம்.
இதற்கிடையில்,
நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின் மொத்த ஏற்றுமதி, வலுவாக வளர்ந்து
வருகிறது. ஆக்ஸ்ட் திங்களில் நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதி
குறியீடு, 51.9 விழுக்காட்டை எட்டி, கடந்த 17 திங்களாக தொடர்ந்து உயர்ந்து
வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.