சீன-அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவு குறித்த சீன நிலைப்பாடு என்ற வெள்ளையறிக்கையை 9ம் நாள் சீன அரசவையின் செய்தி அலுவலகம் வெளியிட்டது.
இரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவின் உண்மையைத் தெளிவுப்படுத்தி, தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து சீனாவின் கொள்கை மற்றும் நிலைப்பாட்டை இவ்வெள்ளையறிக்கை விளக்கிக் கூறியது.
ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவது, இரு நாட்டு பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவின் சாராம்சமாகும். இரு தரப்புகள், வர்த்தக ஒத்துழைப்பில் சர்ச்சைகளைச் சந்திப்பது இயல்பானது.
தத்தமது மைய நலன்கள் மற்றும் முக்கிய கவனத்துக்கு மதிப்பளித்து, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறைகளைத் தேட வேண்டும். வர்த்தகப் போரில் வெற்றியாளர் எவரும் இல்லை மற்றும் பாதுகாப்புவாதத்துக்கு எதிர்காலமும் இல்லை.
அமெரிக்காவும் சீனாவும், நேர்மறைவான திசையை நோக்கிப் பயணித்து, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி, சீன-அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவின் சுமுகமான மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.