சீனாவில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை, வரி திரும்பப் பெறும் கடைகளின் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகரித்து 7200ஐ எட்டியது.
வரி திரும்பப் பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட, 186விழுக்காடு அதிகரித்துள்ளது. வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்களின் விற்பனை மதிப்பும் திரும்பப் பெற்ற வரியின் மொத்த தொகையும் முறையே 94.6விழுக்காடு மற்றும் 93.2விழுக்காடு அதிகரித்துள்ளன.
சீனாவுக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையும் மேலும் அதிகரித்துள்ளது என்று சீனத் தேசிய வரி விதிப்புப் பணியகத்தின் துணை தலைவர் வாங் டௌஷூ ஜூலை 28ஆம் நாள் கூறினார்.