தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை (அக்டோபர் 20), ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் கொண்டாடப்பட உள்ளது.
இந்த கொண்டாட்டத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், இறைவனை வழிபடுவதும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
தீபாவளி தினத்தில் அதிகாலை 3 மணி முதல் 5.30 மணிக்குள் கங்கா ஸ்நானம் செய்வது மிகவும் உகந்த நேரமாகக் கருதப்படுகிறது.
அன்று அதிகாலையில் சுடுநீரில் கங்கா தேவி வாசம் செய்வதாக ஒரு நம்பிக்கை உள்ளதால், நல்லெண்ணெய் மற்றும் சீயக்காய் தேய்த்துச் சுடுநீரில் நீராடினால் கங்கையில் குளித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மகாலட்சுமியின் அருளைப் பெற நல்லெண்ணெய் குளியல் அவசியம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
தீபாவளி 2025: எண்ணெய் குளியல் மற்றும் பூஜைக்கான உகந்த நேரங்கள்
