திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அதன் பொதுக்குழுக் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரையில் நடத்தியது.
இதன் மூலம், கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை நகரில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.
திமுகவின் நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் திமுகவின் முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதியை தமிழ்நாடு முழுவதும் செம்மொழி நாள் என கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் ஆகியோருக்கு பொதுக்குழுவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
