ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஏசிசி) நடந்து வரும் சர்ச்சையைத் தீவிரப்படுத்தும் விதமாக, ஆசிய கோப்பை 2025 கோப்பையை இந்தியாவிடம் உடனடியாகத் திரும்ப ஒப்படைக்குமாறு ஏசிசி தலைவர் மொஹ்சின் நக்விக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தப் பிரச்சனை, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி, போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவில் ஏசிசி தலைவர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருமான மொஹ்சின் நக்வியிடம் கோப்பையைப் பெற மறுத்ததில் இருந்து தொடங்கியது.
இந்திய கிரிக்கெட் அணி மறுத்ததைத் தொடர்ந்து, மொஹ்சின் நக்வி பாரம்பரிய முறைப்படியான பரிசளிப்பு விழாவை ரத்து செய்து, கோப்பையை ஏசிசி அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல உத்தரவிட்டார்.
ஆசிய கோப்பையைத் திரும்ப ஒப்படைக்க பிசிசிஐ கோரிக்கை
