சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி ஆகஸ்ட் 27ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில், கம்யூனிஸ்ட் கட்சி சார்பற்ற பிரமுகர்கள் கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் சீனத் தேசிய பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி பற்றிய 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் முன்மொழிவு குறித்து, பல்வேறு ஜனநாயக கட்சிகளின் மத்திய கமிட்டி, சீனத் தேசிய தொழில் துறை சங்கத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் மற்றும் கட்சி சார்பற்ற பிரமுகர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் கேட்டறியப்பட்டன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இதில் கலந்துகொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், 15ஆவது ஐந்தாண்டுத் திட்டக் காலகட்டத்தின் வளர்ச்சி, சோஷலியச் சமூகத்தின் நவீனமயமாக்கத்தை நனவாக்குவதில் ஊன்றி நிற்க வேண்டும் என்றார். மேலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைமைகளுக்கு ஏற்ப, உயர்நிலை அறிவியல் தொழில் நுட்பத்தின் தற்சார்பு வளர்ச்சியை உறுதியாக முன்னேற்றி, கூட்டுச் செழுமையை நிதானமாக விரைவுபடுத்த வேண்டும் என்றும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் சீனாவின் பல்வேறு தேசிய இனத்தவர்களும், வல்லரசு கட்டுமானம், சீன தேசிய இனத்தின் மறுசீர்மைப்பை நனவாக்கும் வகையில் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
