சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் அக்டோபர் 30ம் நாள் தென்கொரியாவின் ஃபுசன் நகரில் சந்திப்பு நடத்தினர்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-அமெரிக்க உறவு நிலையாக உள்ளது. சீனாவின் வளர்ச்சியும், அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவோம் என்று டிரம்ப் முன்வைத்த இலக்கும் சேர்ந்து நனவாக்கப்படலாம். சீனாவும் அமெரிக்காவும், கூட்டுச் செழுமையையும் பெறலாம். அரசுத் தலைவர் டிரம்புடன் இணைந்து, சீன-அமெரிக்க உறவுக்கு உறுதியான அடிப்படையை அமைத்து, இரு நாட்டு வளர்ச்சிக்குச் சீரான சூழலை உருவாக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
டொனால்ட் டிரம்ப் கூறுகையில், எனது பழைய நண்பரைச் சந்தித்ததில் பெருமைப்படுகிறேன். நாங்கள் இருவரும் பல ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளோம். மேலதிக கருத்து ஒற்றுமைகளைப் பெறுவோம். வல்லரசின் மகத்தான தலைவர், ஷிச்சின்பிங் ஆவார் என்று குறிப்பிட்டார்.
