சீனா ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதைச் சாக்குபோக்காக கொண்டு, சீனா மீது 50முதல் 100விழுக்காட்டு வரையான வரி வசூலிக்குமாறு அமெரிக்கா அண்மையில் ஜி-7 மற்றும் நேட்டோவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் 15ஆம் நாள் திங்கள்கிழமை கூறுகையில்,
ரஷியாவுடன் தொடர்பான பிரச்சினையை கூறி, சீனா மீது வர்த்தக மற்றும் பொருளாதார தடை விதிப்பதை சீனா எப்போதும் எதிர்க்கின்றது. அமெரிக்காவின் கூடுதல் வரி வசூலிப்பு, ஒரு பிரதான ஒருதலைப்பட்ச மிரட்டல் நடவடிக்கையாகவும் பொருளாதார நிர்பந்த செயலாகவும் உள்ளது. சொந்த நியாயமான உரிமைகளைப் பேணிக்காக்க சீனா அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.