ஒசாகா உலகக் கண்காட்சியிலுள்ள சீனாவின்அரங்கம் இக்கண்காட்சியில் சொந்தமாகக் கட்டியமைக்கப்பட்ட பெரிய அரங்கங்களில்
கண்காட்சி வடிவமைப்புக்கான தங்கப் பரிசை வென்றுள்ளது. 12ஆம் நாளிரவு நடைபெற்ற பரிசளிப்பு
விழாவில் சர்வதேச கண்காட்சிப் பணியகம் இப்பரிசை சீன அரங்கத்திற்கு வழங்கியுள்ளது.
வெளிநாடுகளில் நடைபெற்ற பன்னோக்கக்
கண்காட்சிகளில் சீனா வென்ற முதலாவது தங்கப் பரிசு இதுவாகும்.
கட்டிடக்கலை, கண்காட்சி, கலை முதலிய
துறைகளைச் சேர்ந்த 9 சர்வதேச நிபுணர்கள் கூட்டாகப் பரிசீலனை செய்து கண்காட்சி
வடிவமைப்பு, கட்டிடக்கலை, கருப்பொருள் விளக்கம் ஆகிய 3 பிரிவுகளில் பரிசுகளைத்
தேர்வு செய்தனர்.
அவற்றில்
சௌதி அரேபிய அரங்கமும் இத்தாலி அரங்கமும் முறையே கட்டிடக்கலை மற்றும் கருப்பொருள்
விளக்கத்துக்கான தங்கப் பரிசைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.