நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களின் டிஜிட்டல் திறனை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இனிவரும் கல்வியாண்டில் 3-ம் வகுப்பு முதலே செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய பாடத்திட்டமானது, மாணவர்களின் வயது மற்றும் வகுப்பு நிலைக்கேற்பப் படிப்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு AI அடிப்படை, விளையாட்டுத் திறன் பயிற்சி ஆகியவை அறிமுகப்படுத்தப்படும்.
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை செல்லும் மாணவர்களுக்கு, சிறு ரோபோக்கள் தயாரித்தல், கோடிங் பிளாக்ஸ், தர்க்க ரீதியான விளையாட்டுகள் (Logical Games) போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்படும். மேலும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மூத்த மாணவர்களுக்கு இயந்திரக் கற்றல் (Machine Learning), தரவு அறிவியல் (Data Science), AI நெறிமுறைகள் (AI Ethics) மற்றும் உண்மையான உலகப் பயன்பாட்டுத் திட்டங்கள் (Real-world Projects) ஆகியவற்றில் ஆழமான பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இந்தக் கல்வி மாற்றம் மூலம், இந்திய மாணவர்கள் எதிர்காலத் தொழில்நுட்பச் சவால்களைச் சந்திக்கத் தயாராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                







 
                                     
                                     
                                     
                             
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                