சர்வதேச நிலைமை பதற்றமாகி வரும் பின்னணியில், பிரிட்டன் தலைமை அமைச்சர் கீர் ஸ்டார்மர் தனது சீனப் பயணத்தைத் துவங்கினார்.
கடந்த முறை பிரிட்டன் தலைமை அமைச்சர் சீனாவில் பயணம் மேற்கொண்டது முதல் இதுவரை 8ஆண்டுகள் ஆகிவிட்டன. மேலும், ஸ்டார்மர் அண்மையில் சீனாவில் பயணம் மேற்கொண்ட ஒரே ஒரு வெளிநாட்டுத் தலைவர் அல்ல.
சமத்துவம் மற்றும் ஒழுங்கான பல்துருவமயமாக்கம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாட்டையும் அனைவருக்குமான முன்னேற்றத்தையும் கூட்டாக முன்னெடுக்கும் உலகமயமாக்கத்தை நனவாக்குவது சர்வதேச உறவு பற்றிய பல்வேறு நாடுகளின் ஒத்த கருத்தாகும் என்பது பன்னாட்டு தலைவர்களின் நெருங்கிய சீனப் பயணங்கள் மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளது. உலக இணையப் பயனர்களின் மீது சீன ஊடகக் குழுமம் நடத்திய கருத்து கணிப்பின்படி, 85.2விழுக்காட்டினர் இதைத் தெரிவித்தனர்.
மேலும், வெளிநாடுகளுடனான உறவில் மேலதிக உறுதித் தன்மையை நாடுவது பிரிட்டன் தலைமை அமைச்சரின் சீனப் பயணத்தின் நோக்கமாகும் என்று 64.8விழுக்காட்டினர் கருதினர். அளவுக்கு அப்பாற்பட்ட சீனச் சந்தை பிரிட்டன் நிறுவனங்களின் மிகப் பெரிய வளர்ச்சி வாய்ப்பாகும் என்று 85.8விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.
