சீன வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகார அமைச்சகத்தின் தகவலின்படி, ஜூன் 5ஆம் நாள் வரை, சீன நாடளவில் 1கோடியே 21லட்சத்து 33ஆயிரம் ஹெக்டர் நிரப்பரப்பு அளவில் கோதுமை அறுவடை செய்யப்பட்டுள்ளது. இந்த அளவு நாடளவிலான கோடைக்கால கோதுமை அறுவடைப் பணியில் பாதியளவாகும்.
இப்பணியை உத்தரவாதம் செய்யும் வகையில், உற்பத்தி இயந்திரமயமாக்க தொழில்நுட்பங்கள் பற்றிய வழிகாட்டல் முன்மொழிவுகளை சீன வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகார அமைச்சகம் முன்கூட்டியே வெளியிட்டிருந்தது. வேளாண் இயந்திரங்களை இயக்குவதற்குரிய பயிற்சிகளை அளித்தது.
மேலும், காலநிலை மாற்றங்களில் பெரும் கவனம் செலுத்தி வேளாண் இயந்திரங்களை மாநிலங்களைக் கடந்து எடுத்துச் சென்று வேலை செய்யும் வகையில், தொடர்புடைய பிரிவுகளுடன் இணைந்து உத்தரவாதப் பணிகளை மேற்கொண்டு, கோதுமை அறுவடைப் பணி நிதானமாகவும் ஒழுங்காகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்த முயற்சிச் செய்யவுள்ளதாகவும் சீன வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.