பஞ்ச சீலக் கோட்பாடுகள் வெளியிடப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக் கூட்டம் ஜூன் 28ஆம் நாள் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில்,
பஞ்ச சீலக் கோட்பாடுகளின் 70ஆண்டு நிறைவை நாம் இன்று நினைவு கூருகிறோம். புதிய நிலைமையில், இக்கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், மனித குல பொது எதிர்கால சமூகத்தைக் கட்டியமைத்து, மனித நாகரிக முன்னேற்றத்திற்கு உந்து சக்தி அளிக்க வேண்டும்.
அரசுரிமை சமநிலையை நாம் கடைபிடிக்க வேண்டும். ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளிப்பதன் அடிப்படையை வலுப்படுத்த வேண்டும். அமைதி மற்றும் பாதுகாப்பு இலக்கை நனவாக்க வேண்டும். செழுமையைக் கூட்டாக முன்னேற்றும் ஆற்றலைத் திரட்ட வேண்டும். நேர்மையான கருத்துகளை பின்பற்ற வேண்டும். திறப்புதன்மையையும் உள்ளடக்கும் தன்மையையும் வெளிகாட்ட வேண்டும்.
அமைதிப் பாதையைப் பின்பற்றுவது, பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைப்பது, உலக கூட்டு செழுமையை முன்னேற்றுவது ஆகியவை குறித்து சீனாவின் மனவுறுதி மாறாது என்றார்.