பூமியில் இருந்து சுமார் 146 ஒளி ஆண்டுகள் தொலைவில், நம் பூமியைப் போன்றே அளவு கொண்ட புதிய கிரகம் ஒன்றை சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளனர்.
HD 137010 b என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம், அதன் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது. இது பூமியை விட வெறும் 6 சதவீதம் மட்டுமே பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து நாசாவின் கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் இந்த கிரகத்தைக் கண்டறிந்துள்ளனர்.
பூமியில் ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள் என்பது போல, இந்த கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது 355 நாட்கள் ஆகும்.
146 ஒளி ஆண்டுகள் தொலைவில் மற்றுமொரு பூமி கண்டுபிடிப்பு
