இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் இந்தியத் திரையுலகின் முந்தைய சாதனைகளைத் தகர்த்து எறிந்துள்ளது.
2025 டிசம்பர் 5 ஆம் தேதி வெளியான இப்படம், தற்போது இந்தியாவில் மட்டும் ₹1,000 கோடி வசூலைக் கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.
இந்தச் சாதனையின் சிறப்பம்சம் என்னவென்றால், பல மொழிகளில் டப் செய்யப்பட்டு 1000 கோடி ஈட்டிய பாகுபலி 2, கேஜிஎப் 2 மற்றும் புஷ்பா 2 போன்ற படங்களுக்கு மத்தியில், ஒரே மொழியில் (ஹிந்தி) வெளியாகி 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை துரந்தர் பெற்றுள்ளது.
துரந்தர் வசூல் சாதனை: 1000 கோடியைத் தாண்டிய முதல் நேரடி ஹிந்திப் படம்
