அமைச்சர்கள் யாரும் தவறு செய்யக் கூடாது – முதல்வர் விஜய் எச்சரிக்கை

Estimated read time 1 min read

அமைச்சர்கள் யாரும் தவறு செய்யக் கூடாது என முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

`வெற்றித் தமிழகம்’ என்ற பெயரில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் நிர்வாகம் மறுசீரமைப்பு, மேகதாது, பயிர் கடன், தொழில் முதலீடு, புதிய திட்டங்கள், பட்ஜெட் கூட்டத்தொடர், முக்கிய துறைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவையில் முக்கிய ஆலோசனை செய்யப்பட்டது.

தலைமை செயலகத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், “அமைச்சர்கள் யாரும் தவறு செய்யக் கூடாது, தவறு செய்பவர்கள் மீது உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர்கள் கீழ் பணியாற்றக் கூடியவர்களும் தவறு செய்யாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். அமைச்சர்கள் துறை ரீதியாக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதிகள் வெறும் வாக்குறுதிகளாக மட்டும் நான் அளிக்கவில்லை. மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் மட்டுமே தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டுள்ளது. பெயர் அளவில் திட்டங்கள் இருக்கக் கூடாது, நாம் செயல்படுத்தும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர வேண்டும்” என அறிவுறுத்தினார்.

You May Also Like

More From Author