எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ரீமாஸ்டரிங் செய்யப்பட்டு மறுவெளியீடு செய்யப்பட்ட ‘பாகுபலி: தி எபிக்’ (Baahubali: The Epic) திரைப்படம், வெளியான முதல் வார இறுதியிலேயே புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இரண்டு பாகங்களை ஒருங்கிணைத்து ஒரே பாகமாக அக்டோபர் 31-ஆம் தேதி வெளியான இந்த ‘பாகுபலி: தி எபிக்’ திரைப்படம், முதல் வார இறுதியில் ரூ. 22.56 கோடி வசூலித்துள்ளது.
இந்த வசூல், 2015-ஆம் ஆண்டு வெளியான ‘பாகுபலி: தி பிகினிங்’ படத்தின் இந்தி பதிப்பின் முதல் வார இறுதி வசூலை (ரூ. 22.35 கோடி) விஞ்சி புதிய சாதனை படைத்துள்ளது.
‘பாகுபலி: தி எபிக்’: முதல் வார இறுதியிலேயே புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனை!
