சீன ஊடகக் குழுமம் மற்றும் லாகோஸ் நகரிலுள்ள சீனாவின் துணை தூதரகம் கூட்டாக நடத்திய புத்தாக்கம், திறப்பு மற்றும் பகிர்வுடன் கூடிய வளர்ச்சிக்கான உலக உரையாடல் நிகழ்ச்சி நைஜீரியாவின் லகோஸ் நகரில் நடைபெற்றது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரை துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹெசியுங் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வு, பெய்ஜிங்கில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. உயர் நிலை திறப்பு பணியை சீனா விரிவாக்கி, ஒத்துழைப்பின் மூலம் கூட்டு வெற்றி பெறும் நிலைமையை உருவாக்க வேண்டும் என்று இதில் தெரிவிக்கப்பட்டது. சீனாவின் புதிய வளர்ச்சி திட்டத்தின் வழிகாட்டலில், சீனா திறப்புப் பணியை மென்மேலும் வலுப்படுத்தி, உலகிற்கு மேலதிகமான வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும். சீன ஊடகக் குழுமம், ஒத்துழைப்பு கூட்டாளிகளுடன் இணைந்து, அறிவுகளை சேகரித்து கூட்டு கலந்தாய்வு செய்யும் உலக மேடையை உருவாக்கி, நான்கு முக்கிய உலக முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தி, உலக ஆட்சி முறை பற்றிய சீன திட்டத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றது என்றார்.
