2026ஆம் ஆண்டு சீனச் சர்வதேசச் சேவை வர்த்தகக் கண்காட்சி செப்டெம்பர் மாதம் 10ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் துவங்கவுள்ளது. நடப்புக் காட்சியில் 80க்கும் அதிகமான தொழில் நிறுவனங்களும் அமைப்புகளும் சுமார் 180 புத்தாக்கச் சாதனைகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளன.
மேலும் இதில் வெளிநாட்டுச் சந்தையில் பங்கேற்கும் சேவைத் தொழில் நிறுவனங்களுக்கு முதன்முதலாகச் சிறப்புக் காட்சி அரங்கு அமைக்கப்படவுள்ளது.
இதுவரை, பிரிட்டன், டென்மார்க், பிரேசில், ஆஸ்திரேலியா, உளக வர்த்தக மையங்கள் சங்கம், ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு உள்ளிட்ட கிட்டத்தட்ட 70 நாடுகளும், பிரதேசங்களும் சர்வதேச அமைப்புகளும் நடப்புக் கண்காட்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக உறுதி செய்துள்ளன. நார்வே மற்றும் சீனக் குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சி பிரதேசம், இக்கண்காட்சியின் கௌரவ விருந்தினர் சார்பில் முறையே தேசிய அரங்கையும், சிறப்பியல்பு கருப்பொருளுடைய அரங்கையும் நிறுவ உள்ளது.
