2ஆவது சீன-ஐரோப்ப அறிவியலாளர் கருத்தரங்கு நவம்பர் 1,2 ஆகிய நாட்களில், ஜெர்மனியின் ஹைதெர்பாக் நகரில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான சீன-ஐரோப்ப அறிவியலாளர்கள், அறிஞர்கள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதலியோர், செயற்கை நுண்ணறிவு போன்ற முன்னணியில் உள்ள அறிவியல் தொழில் நுட்பம் குறித்து விரிவாக விவாதித்தனர்.
ஜெர்மனிக்கான சீனத் தூதரகத்தைச் சேர்ந்த் கல்விப் பிரிவின் கவுன்சிலர் சோஷ்ச்சியாங் இதன் துவக்க விழாவில் உரைநிகழ்த்தினார். அறிவியல் தொழில் நுட்பப் பரிமாற்றம், சீனா மற்றும் ஐரோப்பாவின் முக்கிய தொடர்பு பாலமாகும். செயற்கை நுண்ணறிவு, உயிரின மருந்து, காலநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில், இரு தரப்புகளுக்கிடையில் ஒத்துழைப்பு வாய்ப்புகள் அதிகம். உலகளாவிய அறைகூவல்களைச் சமாளிக்க, சீன மற்றும் ஐரோப்பாவின் அறிவியலாளர்கள் கூட்டாக ஒத்துழைத்து, அறிவியல் தொழில் நுட்பத்தின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தி, மனித குலத்தின் வளர்ச்சிக்குச் சேவை புரிய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
முதலாவது சீன-ஐரோப்ப அறிவியலாளர் கருத்தரங்கு 2024ஆம் ஆண்டின் அக்டோபர் திங்களில், ஜெர்மனியின் பிராங்க்ஃபோர்ட் நகரில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
