சீனப் பயணியர் விமானப் பணியகத்தின் தரவின்படி, அக்டோபர் மாதத்தில் பயணியர் விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை 6கோடியே 40லட்சத்து 92ஆயிரம் ஆகும்.
கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 14.3விழுக்காடு அதிகரித்தது. அவற்றில் சீன உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் மொத்த எண்ணிக்கை 5கோடியே 82லட்சத்து 89ஆயிரத்தை எட்டி கடந்த ஆண்டைக் கட்டிலும், 10.5விழுக்காடு அதிகமாகும். சர்வதேச விமானங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் மொத்த எண்ணிக்கை 58லட்சத்து 3ஆயிரத்தை எட்டி கடந்த ஆண்டைக் காட்டிலும், 76.1விழுக்காடு அதிகரித்தது. 2019ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்த 96விழுக்காடாக அது மீட்சி உள்ளது.
சரக்குப் போக்குவரத்துத் துறையில், அக்டோபரில் 8லட்சத்து 9ஆயிரம் டன் எடையுள்ள சரக்கு மற்றும் அஞ்சல் பொதிகள் ஏற்றிச்செல்லப்பட்டு கடந்த ஆண்டைக் காட்டிலும், 19.9விழுக்காடு அதிகமாகும்.
அவற்றில், சர்வதேச விமானம் மூலம் ஏற்றிச்செல்லப்பட்ட சரக்கு மற்றும் அஞ்சல் பொதிகள் 3லட்சத்து 30ஆயிரம் டன்னை எட்டி 2019ஆம் ஆண்டைக் காட்டிலும், 52விழுக்காடு அதிகமாகும்.