சீனத் தாழ் உயரத்தில் இயங்கும் உபகரணத் தொழில் தொடர்ச்சியான விரிவாக்கம்

Estimated read time 1 min read

14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில், சீனாவின் தாழ் உயரத்தில் இயங்கும் உபகரணத் தொழில் இடைவிடமாமல் வளர்ச்சியடைந்துள்ளது. தொழிலின் உற்பத்தி மதிப்பு ஆண்டு சராசரியாக 10விழுக்காடான அதிகரிப்பை நிலைநிறுத்தியுள்ளது.

சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உபகரணத் தொழில் வளர்ச்சி மையத்தின் துணை இயக்குநர் லியூஃபாவாங் கூறுகையில், சீனாவின் தாழ் உயரத்தில் இயங்கும் உபகரணங்களின் பயன்பாடு விரைவாக விரிவாகியுள்ளது. பாரம்பரிய பயணச் சேவை, விமான பயிற்சி முதலியவற்றிலிருந்து, அதன் பயன்பாடு, வேளாண்மை மற்றும் வனத்தொழில், சரக்குப் போக்குவரத்து, அவசர மீட்புப் பணி முதலிய மேலதிக துறைகளுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. தற்போது, நாடளவில் வேளாண்மைக்கான ட்ரோன்   எண்ணிக்கை 2லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஆண்டுக்கு 26கோடி ஹெக்டர் பரப்பளவுக்கு சேவையளிக்கப்பட்டுள்ளது.

15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தின் போது, சீனத் தாழ் உயரத்தில் இயங்கும் உபகரணத் தொழில்துறை, தொழில்நுட்ப புத்தாக்கத்தை மேலும் விரிவாக்கி பாதுகாப்பு அடிப்படையை வலுப்படுத்துவதோடு, தொழில் வரையறை அமைப்பு முறையையும் தொடர்ந்து மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author