உலகிற்கு நம்பிக்கை அளிக்குப் சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி

நவம்பர் 5ஆம் நாள் முதல் 10ஆம் நாள் வரை, 8ஆவது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி ஷாங்காய் மாநகரில் நடைபெறுகிறது. இதில் 155 நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கலந்துகொண்டுள்ளன. உலகளவில் முன்னணியில் உள்ள 500 நிறுவனங்களில் 290 நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டுள்ளன. இதனால் பொருட்காட்சியகத்தின் பரப்பளவும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் வரலாற்றிலேயே மிக உயர்வான நிலையை எட்டின.

 

உலகில் இறக்குமதி என்ற தலைப்பிலான முதலாவது தேசிய நிலை பொருட்காட்சியாக இப்பொருட்காட்சி விளங்குகிறது. நடப்பாண்டு இப்பொருட்காட்சியின் 8 ஆவது ஆண்டாகும். கடந்த 8 ஆண்டுகளில், உலக நிலைமை ஏற்கனவே மாறியுள்ளது. ஒரு தரப்புவாதமும் பாதுகாப்புவாதமும் தீவிரமாகி வருகின்றன. இத்தகு சிக்கலான நிலைமையில், ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற இந்த இறக்குமதிப் பொருட்காட்சி, மேன்மேலும் வெளிநாட்டு நிறுவனங்களின் எதிர்பார்ப்பு மற்றும் தேர்வாக மாற்றியுள்ளது.

 

இது குறித்துக் கருத்து தெரிவித்த ஐ.நாவின் உலகளாவிய பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் முன்னாள் பொறுப்பாளர் ஹமித் லாகித், தற்போதைய உலகம் மாபெரும் அறைகூவல்களை எதிர்நோக்கி வரும் நிலையில், சீனாவின் வெளிநாட்டுத் திறப்புப் பணி அதிகமான சாதனைகளைப் பெற்று, மேலும் வெளிநாட்டுத் திறப்பு வாய்ந்த உலகப் பொருளாதாரத்திற்கு முன்மாதிரியை சீனா உருவாக்கியுள்ளது என்று தெரிவித்தார்.

 

நடப்பு இப்பொருட்காட்சியில் 461 வகை புதிய உற்பத்திப் பொருட்கள், அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சேவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உலகில் புதிய உற்பத்திப் பொருட்கள் முதன்முறையாக வெளிகாட்டப்படுதல், அறிவியல் தொழில் நுட்பம் முதன்முறையாக காட்சிக்கு வைக்கப்படுதல் எனச் சீனாவுடன் வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்குரிய முக்கிய மேடையாக இப் பொருட்காட்சி விளங்குகிறது என்று சீனாவுக்கான ஷெஸ் குழுமத்தின் சீனப் பகுதியின் தலைமைச் செயலாளர் ஃபிமிங்யூவான் தெரிவித்தார்.

 

வளர்ச்சி குன்றிய நாடுகளின் உற்பத்திப் பொருட்களின் சிறப்பு அரங்கு முதன்முறையாக இப்பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, வளர்ச்சி குன்றிய நாடுகளின் 163 நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டுள்ளன. இப்பொருட்காட்சியானது இத்தகைய நாடுகளின் உற்பத்திப் பொருட்கள் சீனச் சந்தையில் நுழைவதற்கும், உலகப் பொருளாதாரத்துடன் மேலும் ஒருங்கிணைந்து தெற்குலக நாடுகளின் வளர்ச்சி உரிமை மற்றும் கருத்து வெளிப்பாட்டுரிமையை உயர்த்துவதற்கும் உதவி செய்யும்.

You May Also Like

More From Author