பிலிப்பைன்ஸில் வீசிய கல்பேகி சூறாவளி (Typhoon Kalmaegi), இந்த ஆண்டின் மிக மோசமான இயற்கை பேரழிவாக மாறியுள்ளது.
அந்நாட்டின் மத்திய மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை குறைந்தது 114 பேர் உயிரிழந்தனர், மேலும் நூற்றுக்கணக்கானோர் காணவில்லை.
இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், நாடு முழுவதும் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் திடீர் வெள்ளத்தில் சிக்கி நீரில் மூழ்கியவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலத்த சேதமடைந்த மத்திய மாகாணமான செபுவில் மட்டும் 71 பேர் உயிரிழந்தனர்.
பிலிப்பைன்ஸில் பேரழிவு: கல்பேகி சூறாவளியால் 114 பேர் பலி
