சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர்லின்ஜியான் அக்டோபர் 13ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், அண்மையில்,
பாகிஸ்தானுக்கும்,
ஆப்கானிஸ்தானுக்கும்
இடையில் மோதல் நிகழ்ந்தது. இதனால் இரு நாட்டுறவு பதற்றமாக உள்ளது. இது குறித்து
கவலை தெரிவித்துள்ள சீனா, இந்த விவகாரத்தில் முழு கவனம் செலுத்தி வருவதாக
தெரிவித்தார்.
மேலும்,
இரு நாடுகள் பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம், தத்தமது அக்கறை கொண்ட
பிரச்சினைகளை உகந்த முறையில் தீர்த்து, மோதல் தீவிரமாகுவதைத் தவிர்க்க வேண்டும்
என்றும், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் உறவின் மேம்பாட்டுக்கு சீனா தொடர்ந்து பங்காற்ற
விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.