சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங், அக்டோபர் 11ஆம் நாள், மக்கள் மாமண்டபத்தில், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், மத்தியக் கமிட்டி செயலகத்தின் நிரந்தரச் செயலாளருமான லுவாங் குவாங் உடன் சந்திப்பு நடத்தினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை மற்றும் சோஷலிச அமைப்புமுறையில் ஊன்றி நிற்பது, சீன-வியட்நாம் உறவை வளர்ப்பதற்கான மிக உறுதியான அரசியல் அடிப்படையாகும். வியட்நாமுடன் இணைந்து, ஒன்றுக்கொன்று நலன் தரும் உயர்நிலை ஒத்துழைப்புகளை ஆழமாக்குவது, சர்வதேச நேர்மை மற்றும் நீதியைப் பேணிக்காப்பது, மனித குலத்தின் முன்னேற்ற லட்சியத்தை விரைவுபடுத்துவது ஆகிய துறைகளில், உலக முன்னணியில் முன்னேறி, நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்த சீன-வியட்நாம் பொது எதிர்காலச் சமூகத்தைக் கூட்டாக உருவாக்க சீனா விரும்புகிறது என்றார்.
மேலும், இரு தரப்பும், அரசியல் திசையைச் சரியாகக் கடைப்பிடித்து, கட்சி மற்றும் நாட்டின் மேலாண்மை பற்றிய அனுப்பவங்களின் பரிமாற்றம் மற்றும் பகிர்வை வலுப்படுத்தி, ஒத்துழைப்புகளின் உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணர்ந்து, வளர்ச்சி நெடுநோக்கு பற்றிய தொடர்புகளைப் பன்முகங்களிலும் முன்னேற்ற வேண்டும் என்றும், அரசு சாரா நட்புறவை வளர்த்து, பாரம்பரிய நட்புறவு பற்றிய கல்வியை வலுப்படுத்தி, இரு நாட்டுறவின் நீண்டகால வளர்ச்சிக்கான மக்களின் முக்கிய விருப்பத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.
லுவாங் குவாங் கூறுகையில், சீனாவுடன் இணைந்து, இரு கட்சிகள் மற்றும் இரு நாடுகளின் அதியுயர் தலைவர்கள் எட்டிய முக்கிய பொதுக் கருத்துகளைச் செயல்படுத்தி, இரு கட்சிகள் மற்றும் இரு நாட்டுறவை மேலும் வலுப்படுத்தி, பல்வேறு துறைகளில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, வியட்நாம்-சீனப் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளி உறவும், வியட்நாம்-சீனப் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானமும் புதிய சாதனைகளைப் பெறுவதை முன்னேற்ற விரும்புவதாக தெரிவித்தார்.