பொது மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, ரெயில் பயணங்களின் போது விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களின் விலையை இந்திய ரெயில்வே ரூ.1 குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரெயில்வே நிலையங்கள் மற்றும் ரெயில்களில் பயணிகள் பயன்படுத்தும் “ரெயில் நீர்” பாட்டில்கள் மற்றும் பிற பிராண்டுகளின் தண்ணீர் பாட்டில்கள் தற்போது ஒரு லிட்டருக்கு ரூ.15 மற்றும் அரை லிட்டருக்கு ரூ.10 என்ற விலையில் விற்பனை செய்யபட்டு வருகிறது.
இந்த விலைகள் வரும் செப்டம்பர் 22, 2025 முதல் மாற்றம் செய்யப்படவுள்ளதாக இந்திய ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி:
ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.15-ல் இருந்து ரூ.14-க்கு குறைக்கப்பட்டுள்ளது. அரை லிட்டர் (500 மில்லி) பாட்டிலின் விலை ரூ.10-ல் இருந்து ரூ.9-க்கு குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பு ரெயில்வே கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து உணவு மற்றும் பானங்கள் விற்பனை நிலையங்களிலும், ரெயில்களிலும் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய ரெயில்வே சார்பில் இந்த தீர்மானம், பயணிகளுக்கு நிதிச் சுமையை குறைக்கும் வகையில், பொது சேவையை மேம்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.