குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற கச் மற்றும் சௌராஷ்டிரா பிராந்தியத்திற்கான துடிப்பான குஜராத் மண்டல மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் உரையாற்றிய அவர், உலகின் பல நாடுகள் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நிச்சயமற்ற சூழலைச் சந்தித்து வரும் வேளையில், இந்தியா மட்டும் முன்னோடியில்லாத உறுதியுடனும், நம்பிக்கையுடனும் வளர்ந்து வருவதாகத் தெரிவித்தார்.
உலகளாவிய நிச்சயமற்ற சூழலிலும் இந்தியா உறுதியாக உள்ளது: பிரதமர் மோடி
