சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சர் பைசலின் அழைப்பையேற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ டிசம்பர் 14ஆம் நாள் சௌதி அரேபியாவில் பயணம் மேற்கொண்டார்.
இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 35ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இப்பயணம் மேற்கொண்டதாகவும், இரு நாட்டுறவு நீண்டகால வளர்ச்சியைப் பெற்று இரு நாட்டு மக்களுக்குக் கூட்டாக நன்மையைப் படைத்துள்ளதாகவும் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்திய போது சுட்டிக்காட்டினர்.
ஒரே சீனா எனும் நிலைப்பாட்டில் ஊன்றி நிற்பதாகவும், தைவான் சீனாவின் உரிமைப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும் என்றும் சௌதி அரேபிய தரப்பு மீண்டும் வலியுறுத்தியது.
ஈரானுடனான உறவை சௌதி அரேபியா வளர்ப்பதற்குச் சீனா ஆதரவளித்து பிரதேச மற்றும் சர்வதேச பாதுகாப்பையும் நிதானத்தையும் நனவாக்குவதில் சௌதி அரேபியாவின் பங்களிப்பு மற்றும் முயற்சியை பாராட்டியது.
