சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ அழைப்பின்படி,17ஆம் நாள், வெனிசுலா வெளியுறவு அமைச்சர் இவான் கில்லுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
தற்போதைய வெனிசுலா நாட்டின் நிலைமை குறித்து அறிமுகப்படுத்திய இவான் கில், வெனிசுலா அரசு மற்றும் மக்கள் நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் நியாயமான உரிமைகளைக் கண்டிப்பாகப் பாதுகாப்பார்கள் என்று தெரிவித்தார்.
வாங்யீ கூறுகையில், சீனாவும் வெனிசுலாவும் நெடுநோக்குக் கூட்டாளிகளாகும். ஒரு தரப்புவாத தன்மை வாய்ந்த எல்லை பழிவாங்கல் நடவடிக்கைகளைச் சீனத் தரப்பு எதிர்த்து வருகிறது. வெனிசுலா பிற நாடுகளுடன் கூட்டு நலன் தரும் ஒத்துழைப்புகளை தற்சார்பாக வலுப்படுத்த வேண்டும். அதோடு, வெனிசுலா சொந்தமான நியாயமான நலன்களை பேணிக்காக்கும் நிலைப்பாட்டை சர்வதேசச் சமூகம் புரிந்துகொண்டு ஆதரிக்க வேண்டும் என்றார்.
