2016, 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து குற்றவியல் வழக்குகளும், ஒழுங்கு நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, போராட்டக் காலத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் அதே இடங்களில் பணியமர்த்தப்படவும், வேலைநிறுத்தம் காரணமாக அவர்கள் பதவி உயர்வில் ஏற்பட்டிருந்த பாதிப்புகளையும் சரிசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போதுவரை முதல் தகவல் அறிக்கை பெறப்பட்டு நிலுவை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.