Web team
அவள் ! கவிஞர் இரா .இரவி!
வெள்ளையும் இல்லை
கருப்பும் இல்லை
உயரமும் இல்லை
குள்ளமும் இல்லை
பேரழகியும் இல்லை
அசிங்கமும் இல்லை
அறிவாளியும் இல்லை
முட்டாளும் இல்லை
ஆர்ப்பட்டமும் இல்லை
அமைதியும் இல்லை
அவளுக்கு உவமை
அவனியில் இல்லை
புன்னகை செய்தால்
பூரிக்கும் உள்ளம்
மூளையில் நுழைந்து
மூலையில் அமர்ந்தாள் !
**காதலர்கள் கவிஞர் இரா .இரவி
ஊடல் காரணமாக
இருவரும் இனி
சந்திக்க மாட்டோம்
என முடிவு எடுத்து விட்டு
இனி எப்போது சந்திப்போம்
என்று சந்திப்பைப் பற்றியே
சிந்தித்து ஏங்குபவர்கள் !*
* நினைவுச் சிலுவை கவிஞர் இரா .இரவி
பசுமரத்து ஆணியாக
பாவையின் நினைவுகள்
கிறித்தவர்கள் வணங்கும்
ஏசுவிற்கு ஒரே ஒரு முறைதான் சிலுவை
எனக்கு உன்னை நினைக்கும்
ஒவ்வொரு முறையும் நினைவுச் சிலுவை*
ஏசு உயிர்த்து எழுந்ததாகச் சொல்வார்கள்
எனக்கு உயிர்த்து எழ வாய்ப்பே இல்லை !
தொடர்கதையானது ! கவிஞர் இரா .இரவி
அவளைப் பார்த்தால்
போதும் என்று நினைத்தேன்
பார்த்தேன் !
அவளிடம் பேசினால்
**போதும் என்று நினைத்தேன்
பேசினேன் !
அவளைத் தீண்டினால்
**போதும் என்று நினைத்தேன்
தீண்டினேன் !
பார்த்தல் பேசல்
தீண்டல்
**தொடர்கதையானது !*
*கோலம் ! கவிஞர் இரா .இரவி
கோலம் போடும் உந்தன்
கோலம் காண !
அதிக நேரம் தூங்கும் நான்
அதிகாலை எழுந்தேன் !
உதய சூரியனை
உன்னால் பார்த்தேன் !
பனி மலரையும்
பார்த்து ரசித்தேன் !
நீயும் வந்தாய் !
கதவு திறந்தாய் !
கூட்டித் தள்ளினாய் !
வாசல் தெளித்தாய் !
புள்ளி வைத்தாய் !
கோலம் போட்டாய் !
கோலம் பார்த்தேன் !
கல்வெட்டாய்ப் பதிந்தது !
கன்னி உன் நினைவு !
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !