மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் சுகாதாரத் துறை தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் இதுவரை 180 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதில், 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் 20 பேர் மிக நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட செவிலியர் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மீண்டும் நிபா வைரஸ் அச்சுறுத்தல்: பயண கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தும் ஆசிய நாடுகள்
