தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று சென்னையில் ECR பகுதியில் மித மழை பெய்த நிலையில் இன்று காலை முதல் சென்னை நகரம் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
“வட கடலோர தமிழகம் மற்றும் தெற்கு கடலோர தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மாலை / இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையிலான சில இடங்களில் இன்று மிதமானது முதல் லேசானது வரை பலத்த மழை பெய்யக்கூடும். நாளை முதல் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்” என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு!
