புற்றுநோயை வேரறுக்க முதல்வரின் மெகா திட்டம்….!! 

Estimated read time 1 min read

பெண்களை அச்சுறுத்தும் கருப்பை வாய் புற்றுநோயைத் (Cervical Cancer) தடுக்கும் ஒரு மிக முக்கியமான முயற்சியை இன்று (ஜன. 27) முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

தமிழகம் முழுவதும் உள்ள 14 வயதுக்கு உட்பட்ட சுமார் 3.38 லட்சம் சிறுமிகளுக்கு இந்தத் தடுப்பூசி இலவசமாகச் செலுத்தப்பட உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள சுமார் 14,000 ரூபாய் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, இவ்வளவு விலை உயர்ந்த தடுப்பூசியைத் தமிழக அரசே ஏற்று இலவசமாக வழங்குவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதற்கட்டமாகச் சிறுமிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்குவதில் இது ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author