புதிய ரக தொழில்மயமாக்க முன்னேற்றம் குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத் தலைவருமான ஷி ச்சின்பிங் அண்மையில் முக்கிய உத்தரவிட்டார்.
புதிய யுகத்துக்கான புதிய பயணத்தில், சீனாவின் நவீனமயமாக்கலின் மூலம், நாட்டின் கட்டுமானம் மற்றும் தேசத்தின் மறுமலர்ச்சியை விரிவாக முன்னேற்றி, புதிய தொழில்மயமாக்கலை நனவாக்குவது என்பது முக்கியக் கடமையாகும்.
இதற்காக, புதிய தொழில்மயமாக்கத்தை முன்னேற்றுவதற்கான அடிப்படை விதிகளைப் பின்பற்றி, இப்போக்கில் உயர்தர வளர்ச்சிக்கான கோரிக்கைகளை செயல்படுத்தி, தயாரிப்பு திறன் கட்டுமானத்தை எண்ணியல் பொருளாதாரத்துடனும், தொழிலின் தகவல்மயமாக்கத்துடனும் இணைத்து, சீனாவின் நவீனமயமாக்கலுக்கு வலுவான பொருள் மற்றும் தொழில் நுட்ப அடிப்படையை உருவாக்க வேண்டும் என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.
மேலும், புதிய தொழில்மயமாக்கலை முன்னேற்றுவது முறையான திட்டப்பணியாகும். பல்வேறு கொள்கைகள் மற்றும் கூறுகளின் ஆதரவுகளை வழங்கி, புத்தாக்கம் மற்றும் பொறுப்புடன், புதிய தொழில்மயமாக்க முன்னேற்றத்துக்குப் பெரிய ஆற்றலைத் திரட்டி, நவீன சோஷலிச நாட்டின் முழுமையான உருவாக்கத்துக்கு மேலும் பெரும் புதிய பங்குகளை ஆற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தேசிய புதிய தொழில்மயமாக்க முன்னேற்ற மாநாடு செப்டம்பர் 22, 23 ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் ஷி ச்சின்பிங்கின் முக்கிய உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.