கேரளாவில் பதினாறு வயது இளைஞரை தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பில் சேருமாறு தூண்டியதாக, அவரது தாய் மற்றும் அவரது பார்ட்னர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டமான UAPA (Unlawful Activities Prevention Act)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவன், தனது தாய் மற்றும் அவரது பார்ட்னருடன் பிரிட்டனில் (UK) வசித்து வந்தான்.
அங்கு சிறுவனின் தாய் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
அப்போது சிறுவனின் தாயின் காதலன், சிறுவனுக்குத் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் வீடியோக்களைக் காட்டி, அதில் சேருமாறு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கேரளா: 16வயது மகனை ISIS அமைப்பில் சேரத் தூண்டிய தாய் மீது வழக்கு
