உலகளாவிய மேயர்கள் உரையாடல் நவம்பர் 19ஆம் நாள் சீனாவின் ஜியாங்சூ மாநிலத்தின் நான்ஜிங் நகரில் துவங்கியது. புருணை, எகிப்து, ஜெர்மனி, இத்தாலி, சீனா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த மேயர்கள் இக்கூட்டத்தில் பங்கெடுத்து, பல்வேறு நகரங்களுக்கான மேலாண்மை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நான்ஜிங் நகரின் தற்காலிக மேயர் லீ ட்சொங்ஜுன் கூறுகையில், பல்வேறு நாடுகளின் நகரங்கள் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு, வரலாறு மற்றும் பண்பாடுகளைப் பேணிக்காத்து, பசுமையான வளர்ச்சியை நடைமுறைப்படுத்தி, துடிப்பான நகரக் கட்டுமானத்தை முன்னெடுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
