ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற துபாய் விமானக் கண்காட்சி 2025 இல் சாகசப் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய விமானி பலத்த காயங்களுடன் உயிரிழந்ததை இந்திய விமானப்படை எக்ஸ் சமூக வலைதளப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
துபாயிலுள்ள அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் பார்வையாளர்கள் முன் சாகசப் பறக்கும் காட்சி நடைபெற்றபோது, உள்ளூர் நேரம் பிற்பகல் 2:10 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
போர் விமானம் தரையில் விழுந்து தீப்பிழம்பாக வெடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
விபத்து நடந்த இடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதுடன், அவசரகால மீட்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.
துபாய் விமானக் கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜாஸ் போர் விமானம் விபத்து
