டெல்லியில் 15 பேர் பலியான குண்டு வெடிப்புக்கு பின்னால் உள்ள வெளிநாட்டு தீவிரவாத வலையமைப்பை தேசிய புலனாய்வு முகமை (NIA) கண்டறிந்துள்ளது.
இந்த சதித்திட்டத்தின் வெளிநாட்டு தொடர்புகள், தீவிரவாத பயிற்சி மற்றும் தகவல் தொடர்பு வழிகளை NIA பட்டியலிட்டுள்ளது.
டைம்ஸ் நவ் வெளியிட்ட செய்தியின்படி, இந்தத் தற்கொலை படை தாக்குதலை நடத்திய டாக்டர் உமர் நபி மற்ற சந்தேக நபர்களுடன் சேர்ந்து, 2022-ல் துருக்கியில் ஒரு சிரியா தீவிரவாத செயல்பாட்டாளரை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு, பாகிஸ்தானை சேர்ந்த உகாஷா என்ற முக்கிய ஹேண்ட்லரின் உத்தரவின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி குண்டு வெடிப்பு: சிரியா, துருக்கி தொடர்புகள் உள்ளிட்ட வெளிநாட்டு பின்னணி அம்பலம்
