அனைத்து வர்த்தக கூட்டாளிகளின் மீது சமமான சுங்க வரி விதிக்கும் அமெரிக்காவுக்கு சீனா பல பதில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதைத் தவிர்த்து, சுங்க வரியை தவறாக விதித்த அமெரிக்காவின் மீது சீனாவின் நிலைப்பாடு என்ற ஆவணத்தை சீனா 5ஆம் நாள் வெளியிட்டது.
அதிகார அரசியலை எதிர்த்து, நீதியைப் பேணிக்காக்கும் சீனாவின் பொறுப்பை இந்த ஆவணம் வெளிக்காட்டியது. சர்வதேச சமூகம் ஒற்றுமையுடன் பொருளாதார உலகமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கு இது துணை புரியும். உயர் நிலை திறப்புப் பணியை முன்னேற்றும் சீனா, ஒரே தரப்பு மேலாதிக்கத்தை எதிர்க்கும் இதர நாடுகளுக்கு நம்பிக்கையை அளித்து, கொந்தளிப்பான உலகிற்கு உறுதிதன்மையை கொடுத்துள்ளது.
உலகம், காடு அல்ல. உலகத்தில் விதிகளைப் பின்பற்ற வேண்டும். வளர்ச்சி உலகின் பல்வேறு நாடுகளின் உரிமையாகும். அமெரிக்கா பல தடைகளை ஏற்படுத்தியதோடு, சீனா உலகிற்கு நிறைய வாய்ப்புகளை அளிக்கின்றது.
சீனா சீர்த்திருத்தத்தையும் வெளிநாட்டுத் திறப்புப் பணியையும் உறுதியாக முன்னேற்றும். அன்னிய முதலீடு பற்றிய கொள்கைகள் மாறாது என்று அண்மையில், அன்னிய தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த போது சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.